expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday 16 January 2017

பெருந்தலைவர் காமராஜர்



பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது,  சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
 பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.

"காமராஜ்,
நீ முதலமைச்சர்,
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
 நீ இல்லாம,
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா,
 நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்"
என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா,  அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.

உடனே,
நான் வேலை
போட்டுத் தர்றேன்...

ஆனா,
இந்த விஷயம்
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது

அவன் முரடன்,
உடனே வேலையை
விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே
ஜீவாவுக்குத்
தெரியாமல்,
அவருடைய
மனைவிக்கு
அரசு வேலை
கொடுத்தார்
காமராஜர்.

அதற்குப்
பின்னரே
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
இருவருடைய நட்பும்
வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு
சென்னை அரசு பொது
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே
காணமுடியும்..?

இது போன்ற
தலைவர்களை.

அடித்தட்டு
மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்
காமராஜர்,
ஜீவா,
கக்கன்
போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம்
என்று நினைத்தால்,

செய்யலாமே... !!
நண்பர்களே....!!

தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம்.




ஏடிஎம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம்.

இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.ஏடிஎம்களில் இனி current account ல் வாரம் 100000 வரை எடுக்கலாம்.

Sunday 15 January 2017

களம் கண்ட காமராசர்.....


*களம் கண்ட காமராசர்*
********************
1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான்
போர் மூண்டது. நேருவின் மறைவிற்குப்
பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும்,
எனவே படையெடுப்பின் மூலம் மிரட்டிப்
பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின்
இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான்
கருதினார்.
ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரஸ்
தலைவர் காமராசர் ஆகியோர்
இணைந்து காட்டிய மன உறுதி உலகைவியக்க
வைத்தது.
பகைவரைத் திகைக்க வைத்தது.
பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில்
அமைந்திருந்த போர் முனைக்குச்
சென்று வீரர்களைச்
சந்தித்து உற்சாகமூட்ட காமராசர்
விரும்பினார்.
அவர் விருப்பத்தை அறிந்த
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், குடியரசுத் தலைவர்
இராதா கிருஷ்ணனும் திடுக்கிட்டு அவரைத்
தடுக்க முயன்றனர்.
ஆனால் கர்மவீரரோ பிடிவாதமாக இருந்தார்.
வேறு வழியில்லாமல் பிரதமர் அவர்
விருப்பத்திற்கு இணங்கினாலும், காமராசரைப்
பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளைச்
செய்யுமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார்.
களத்திற்குக் காமராசர் செல்லுவது மிக
இரகசியமாக வைக்கப்பட்டது. பஞ்சாபில்
எல்லைப் பகுதியில் இரு தரப்புப் படைகளும்
எதிரெதிரே அணிவகுத்து நின்றன.
எல்லைப் பகுதியில் காவல் காக்கும்
நமது வீரர்களைச் சந்திக்க வேண்டும் என
காமராசர்
கூறியபோது படைத்தளபதி திடுக்கிட்டு விட்டார்.
ஐயா! வெள்ளை வேட்டி - சட்டையுடன்
தாங்கள் போர் முனைக்குச்
செல்வது அபாயத்தை வரவழைப்பதாகும்.
எதிரிகளின் துப்பாக்கிக்குச் சுலபமான
குறியாகும். எனவே அதைத்தவிர்ப்பது
நல்லது எனப் பணிவுடன் எடுத்துக்
கூறினார்.
அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்ட
அவர் அப்படியானால் கரும்பச்சை நிறக்
கால்சட்டையும், மேல் சட்டையும்
அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார்.
என்னை வேஷம் போடச் சொல்லுகிறீர்களா?
அது என்னால் முடியாது என மறுத்தார்.
வேறு வழியின்றிக் காமராசர் சென்ற
வண்டியில் படைத் தளபதியும்
ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர்.
காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காத
வடநாட்டு வீரர்கள்
"காலா காந்தி!, காலா காந்தி!" (கறுப்பு காந்தி)
எனக் கூவி மகிழ்ந்தனர்.
அவரைச்
சூழ்ந்து ஆரவாரித்தனர்.
இந்தியாவின் வரலாற்றில் அரசுப்பதவி எதிலும்
இல்லாத ஒரு தலைவர் தமது உயிரைத்
துச்சமாக மதித்துப் போர்க்களம்
சென்று திரும்பியது இதுதான் முதலும்
கடைசியுமாகும்.
அவருக்கு முன்போ அவருக்குப்பின்ப
ோ யாரும்
இவ்வாறு துணிந்து சென்றதில்லை...

*நாடு பார்த்தது உண்டா???*
*இந்த நாடு பார்த்தது உண்டா???*

Saturday 7 January 2017

படித்தால் கண் கலங்குவீர்கள்




ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் ,
அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்  .

அருகிலேயே அவளது கணவர் ...
  தூக்க முடியாமல்  ஒரு பெரிய மூட்டையை  தோளில் தூக்கி சுமந்தபடி ,  அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார் ..!
.
இவர்கள் இருவரைத்  தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லை .

காரணம் ... ஊரடங்கு உத்தரவு ..!
.
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன .
போக்குவரத்து அடியோடு  நிறுத்தப்பட்டு விட்டது.
வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் ,
விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள் !

காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இது ! ( 2016 ஜூன் )

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ,  ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார் . அதை தொடர்ந்து கலவரம் வெடித்தது .

இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள் .
உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு ..!
.
சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத்  தள்ள உத்தரவு !
ஆனாலும் அந்த கணவனும் மனைவியும் அந்த ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் .
.
தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: .“எங்கே போகிறீர்கள் ?”

அந்தப் பெண் பதில் சொன்னார் : “ஜவகர் நகருக்கு..?”

“ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?”

“இல்லை ..இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம்.. ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்”

“முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி .. இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? அது இருக்கட்டும் ... இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?”

அந்த கணவன் சொன்னார் : “தெரியும்..பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்..”

“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை . எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு ..”

“போய் விடுவோம்..” –கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள் .
.
இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார்  அந்த போலீஸ்காரர் :“ சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால்  கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு .. தெரியுமா ?”

“ தெரியும் ..”

“அது மட்டும் அல்ல ..இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள் . அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள் .”

அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : “அதுவும் தெரியும் .. ஆனாலும் நாங்கள் போய் விடுவோம் .. போய்த்தான் ஆக வேண்டும்..மிக மிக முக்கியமான வேலை ..”
.
அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார் . கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின்  தொடர்ந்தார் .
.
இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது . மீண்டும் மீண்டும் எச்சரித்தது .
.
அதையும் மீறி  அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த  சாலைகளில்  ....
பகல் முழுவதும் நடந்தார்கள் ; பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள் . ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள் .
.
எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன .
இந்த தம்பதிகள்   தேடி வந்தது பண்டிட்ஜி வீடு . அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது .
தெருவை   நெருங்கினார்கள் .
.
அதற்கு முன் ...ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது : “நில்லுங்கள்”

திரும்பிப் பார்த்தார்கள் .
காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது .

“உங்களை கைது செய்யப் போகிறோம் .”
“எதற்காக ..?”
“உங்கள் தோளில் இருக்கும்  பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை  வைத்திருக்கிறீர்கள் ? அதை கீழே இறக்குங்கள் .”
.
இறக்கினார்கள் .
போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள் . திகைத்துப்  போனார்கள் ..!

“எல்லாமே உணவுப் பொருட்கள் .. யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள்..?”
அந்தப் பெண் சொன்னார் : “இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு ..! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலே சொல்லி விடுகிறேன்.”
.
நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண் .

அதிகாலையிலேயே ஒரு  போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு !

பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி . இருவரும் நெருங்கிய தோழிகள் . ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள் .
அது சரி ... போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார்  ?
.
இதோ ..அந்த பரிதாப கதை : “ஹலோ ..இங்கே  ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன . வெளியில் செல்ல முடியவில்லை . வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை.. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை .. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது....

நான்கு  நாட்களாக  நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை . உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ...இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது... நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக ...”
.
பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம் .
.
இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும் , அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள் . “ நான்கு  நாட்களாக பட்டினியா ? எப்படி பண்டிட்டின் குடும்பத்துக்கு உதவுவது..?”
.
ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல் , உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்  .

வீட்டில் இருந்த கோதுமை , அரிசி , பருப்பு , காய்கறிகள் , மசாலா பொருட்கள் ... எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண் . பஸ் , ஆட்டோ எதுவும் இல்லாததால் , பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து ....
.
“இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார்  அந்தப் பெண்.

கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : “ ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள் .. அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு ! பாராட்டுகிறேன் அம்மா ... சரி ...உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?”

“அடுத்த தெருவில்தான் .. !”

“வாருங்கள் .. நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்...”
.
காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார் .
கதவு மெல்ல திறந்தது ; உள்ளே இருந்து வந்த பண்டிட்டும் , அவரது மனைவியும் , இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில்  “ அட கடவுளே ..இது என்ன ? எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள் ? முதலில் உள்ளே வாருங்கள் ..”
.
 தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள் .

வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார் : “சரியம்மா ..முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள் . நான் வருகிறேன் .”

 “நன்றி சார்..”

“பை தி பை .. நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ..?”
.
அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்..”
.
ஆம் .. இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருத்த அந்த நேரத்தில்  ... பசியால் துடித்துக் கொண்டிருந்த  பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு , தேடிச் சென்று உணவு கொடுத்தது சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான் ..!
.
இது கதையல்ல .. “இந்தியா டுடே”யில் வந்த செய்தி !
.
இப்படிப்பட்ட மனித நேயம் , மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை ...
அந்த ஆண்டவனே வந்தால் கூட இந்தியாவில் மத பிரிவினையை உருவாக்க முடியாது !
.
வாழ்த்துக்கள்
எங்கள் இனிய சகோதரி
சுபைதா பேகம் அவர்களே  .. !

Tuesday 3 January 2017

சென்னை நீதிமன்றத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்



*சென்னை நீதிமன்றத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள். இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்*

*Employment Type:* TNGovt Jobs


*காலியிடங்கள்:* 64

*சம்பளம்:* Rs.20200

*தகுதி:* 10th, ITI

*தேர்வு முறை:* Written Exam, Interview

*More Info:* https://goo.gl/v6E8Nw

*கடைசி தேதி:* 25.01.2017

*இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதிங்க.*

*இந்த நல்ல தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.*

🙏🙏🙏👇👇👇🙏🙏

*Ji இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.*

*மேலும் வேலை வாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ள www.yoyojobs.com ல் login செய்யவும்.*