expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday 5 December 2016

ஜியோ இலவச டேட்டா


ஜனவரி 1-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா அளவு நாள் ஒன்றிற்கு 1 GB என குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பயனர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கும்.நாடு முழுக்க ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவே ஜியோ இலவச சேவைகள் நீட்டிக்கப்படுகிறது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் இறுதிக்குள் ஜியோ சேவையில் 10 கோடி பயனர்களை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது. ஜியோ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் போது பயனர் எண்ணிக்கை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.தற்சமயம் வரை ரிலைன்ஸ் ஜியோ சேவையினை சுமார் 5.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றிற்கு 1 GB என்ற அளவு, ஒட்டு மொத்தமாக ஜியோ இண்டர்நெட் பயன்பாடுகளை குறைக்கும் என்பதால் இண்டர்நெட் தரம் அதிகரிக்கும். இதன் காரணமாக ஜியோ பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, ஜியோ நெட்வொர்க் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளை குறைக்கும்.

No comments:

Post a Comment