expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday 26 March 2018

ஆதார் விர்ச்சுவல் எண் நாமே உருவாக்குவது எப்படி?



பல்வேறு சேவைகளுக்காக நம்மால் பகிரப்படும் ஆதார் விவரங்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் நமது மத்திய அரசு, 16 இலக்கங்களை கொண்ட ஆதார் விர்ச்சுவல் எண் என்ற ஒன்றை நாமே உருவாக்கி கொள்ளலாம் என்றும், அதை மார்ச் 2018 -லிருந்து உருவாக்கி கொண்டு, ஜூன் - லிருந்து அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணிற்கு பதிலாக இந்த 16 இலக்க விர்ச்சுவல் எண்ணை கொடுத்து ஆதாரை இணைக்க முடியும்.
        
                    இந்த 16 இலக்க விர்ச்சுவல் எண்ணை நாமே உருவாகுவது எப்படி?

*
இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள் https://resident.uidai.gov.in/web/resident/vidgeneration




* இந்த பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை டைப் செய்து அடுத்து அருகில் உள்ள செக்யூரிட்டி எண்ணையும் டைப் செய்து பிறகு SENT OTP - இதை கிளிக் செய்யுங்கள்.




* ENTER OTP என்ற  இடத்தில், உங்கள் ஆதாருடன் இணைத்த மொபைல் எண்ணிற்கு வந்த தற்காலிக கடவு எண்ணை டைப் செய்யவும்.

 


*அடுத்து GENERATE VID தேர்வு செய்து விட்டு SUBMIT கொடுக்கவும். தற்போது உங்கள் மொபைலுக்கு SMS வாயிலாக AADHAR VIRTUAL ID NUMBER வரும். அதை பயன்படுத்தி ஆதார் இணைப்பு மற்றும் இதர ஆதார் சார்ந்த அணைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். ஒருவர் எத்தனை வேண்டுமானாலும் VIRTUAL ID உருவாக்க முடியும். புதிய எண் உருவானதும் பழைய எண் செயலிழந்து விடும்.


No comments:

Post a Comment